நாற்று நடும் பணி தீவிரம்


நாற்று நடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 14 Nov 2021 1:15 AM IST (Updated: 14 Nov 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி பகுதியில் நாற்று நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காரியாபட்டி, 
காரியாபட்டி பகுதியில் நாற்று நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
நாற்றுநடும் பணி 
 காரியாபட்டி தாலுகா முடுக்கன்குளம், சிறுகுளம், கே.நெடுங்குளம், கோவிலாங்குளம், பச்சேரி பகுதிகளில் நாற்று நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் காரியாபட்டி பகுதிகளிலுள்ள கண்மாய்கள் நிரம்பி வரும் சூழ்நிலையில் நாற்று நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் காரியாபட்டி பகுதியில் ஒரு சில கிராமங்களில்  நாற்று நடவு செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. இந்த நெல் பயிர்கள் உரம் போடும் அளவிற்கு வளர்ந்துள்ளது. விவசாயிகளுக்கு எந்த நேரத்தில் எந்த உரம் இடவேண்டும் என்று காரியாபட்டி பகுதி வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
தொடர்மழை 
இந்த ஆலோசனையின் அடிப்படையில் விவசாயிகள் நெல் நடவு செய்த பயிர்களுக்கு உரங்களை இட்டு தங்களது பயிர்களை பாதுகாத்து வருகின்றனர். 
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- 
காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
ஒரு சில இடங்களில் நாற்று நடும் பணி, மற்ற பகுதிகளில் உரமிடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாசனத்திற்கு தேவையான அளவு தண்ணீர் இருப்பதால் இந்த ஆண்டுநாங்கள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் உள்ளோம். 
இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story