நாளை முதல் மின்சார ரெயிலில் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


நாளை முதல் மின்சார ரெயிலில் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Nov 2021 10:58 AM IST (Updated: 14 Nov 2021 10:58 AM IST)
t-max-icont-min-icon

நாளை முதல் மின்சார ரெயிலில் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், மின்சார ரெயிலில் பயணிக்க தொடக்கத்தில் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து, தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், மின்சார ரெயிலில் பயணிக்க ஆண் பயணிகளுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை ரெயில்வே நிர்வாகம் விதித்திருந்தது. அதேபோல் டிக்கெட் பெறுவதிலும் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தன.

இந்தநிலையில், தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருவதால், மின்சார ரெயிலில் பயணிக்க அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை (திங்கட்கிழமை) முதல் மின்சார ரெயிலில் அனைத்து பயணிகளும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், எவ்வித கட்டுப்பாடுகளின்றி பயணிக்கலாம். மேலும், பயணிகளுக்கு முன்பதிவில்லா டிக்கெட்டுகள், ‘ரிட்டர்ன் டிக்கெட்டுகள்’, ‘சீசன் டிக்கெட்டுகள்’ அனைத்தும் வழங்கப்படும் எனவும், ‘யு.டி.எஸ்’ செல்போன் செயலியிலும் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதே நேரத்தில் முககவசம், சமூக இடைவெளியை உள்ளிட்ட தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பயணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story