சென்னையில் இன்று 8-வது மெகா தடுப்பூசி முகாம் 2 ஆயிரம் இடங்களில் நடக்கிறது


சென்னையில் இன்று 8-வது மெகா தடுப்பூசி முகாம் 2 ஆயிரம் இடங்களில் நடக்கிறது
x
தினத்தந்தி 14 Nov 2021 11:24 AM IST (Updated: 14 Nov 2021 11:24 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இன்று 8-வது மெகா தடுப்பூசி முகாம் 2 ஆயிரம் இடங்களில் நடக்கிறது.

சென்னை,

தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் தீவிர தடுப்பூசி இயக்கமாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இன்று (14-ந் தேதி) 2 ஆயிரம் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 8-வது தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. மேலும், தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள இடங்களை https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega-vac-det.jsp என்ற மாநகராட்சியின் இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

எனவே தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள், 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் மாநகராட்சியின் சிறப்பு முகாம்களில் பங்கு பெற்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Next Story