கோவில்பட்டியில் யூரியா உரம் தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்


கோவில்பட்டியில் யூரியா உரம் தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்
x
தினத்தந்தி 14 Nov 2021 6:07 PM IST (Updated: 14 Nov 2021 6:07 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் யூரியா உரம் தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்

கோவில்பட்டி, நவ.15-
கோவில்பட்டியில் யூரியா உரம் தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
யூரியா தட்டுப்பாடு
கோவில்பட்டி பகுதியில் மானாவாரி நிலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, கம்பு, சோளம் போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட் டுள்ளனர். தற்போது அடை மழை பெய்ததால் பயிர்கள் செழித்து வளர்ந்து வருகின்றன. இவற்றிற்கு விவசாயிகள் யூரியா உரம் இடுவது வழக்கம். ஆனால் யூரியா உரம் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
விவசாயிகள் குவிந்தனர்
நேற்றுமுன்தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 300 டன் யூரியா உரம் வந்ததாக கூறப்படுகிறது. கோவில்பட்டி உரக்கடைகளுக்கு நேற்று முன்தினம் வந்த யூரியா மூட்டைகள், விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது. கோவில்பட்டியில் உள்ள கடைகளில் நேற்று விவசாயிகள் யூரியா வாங்குவதற்கு குவிந்தனர். மாதாங்கோவில் ரோட்டில் உள்ள தனியார் உர விற்பனை கடையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் குவிந்ததால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் விவசாயிகளை போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாமல், ஓரமாக வரிசையில் நின்று வாங்கும்படி அறிவுறுத்தினர். நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் அந்த கடைக்கு வந்து இருந்த 450 யூரியா மூட்டைகள் விவசாயிகளுக்கு விற்கப்பட்டன.
விவசாயிகள் கோரிக்கை
45 கிலோ எடை உள்ள யூரியா மூட்டை ரூ.265-க்கு விற்பனை செய்யப்பட்டது. பொட்டாஷ் உரம் ரூ.1,040-க்கும், டி.ஏ.பி. உரம் ரூ.1,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. காம்ப்ளெக்ஸ் உரம் ரகத்தை பொறுத்து ரூ. 1,220, ரூ 1,275, ரூ 1,390 விலையில் விற்பனை செய்யப்பட்டது. யூரியா விற்பனை காலை 9 மணிக்கு தொடங்கி 1 மணிக்கு முடிந்தது.
விவசாயிகள் கூறும் போது யூரியா தற்போது தட்டுப்பாடு நிலவுகிறது. மாவட்ட நிர்வாகமும், வேளாண் துறையினரும் கூடுதல் யூரியாவை மாவட்டத்திற்கு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Next Story