ஒடுகத்தூர் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் 3 நாட்களுக்குபின் பிணமாக மீட்பு
சிறுவன் 3 நாட்களுக்குபின் பிணமாக மீட்பு
அணைக்கட்டு
ஒடுகத்தூர் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டான்.
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்
அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த கத்தாரி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு நித்திக் ரோஷன் (வயது 5), யுவன் ஸ்ரீ ஆதித்யா (3) என்ற இரண்டு மகன்கள் உண்டு. ஒடுகத்தூர் பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் உத்திரகாவேரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களூக்குமுன் பவித்திரா தனது 2 மகன்களுடன் வெள்ளத்தை வேடிக்கை பார்கத்க சென்றார். யுவன் ஸ்ரீ ஆதித்தயாவை இடுப்பில வைத்துக்கொண்டு, நித்திக் ரோஷனை கையில் பிடித்தபடி வஏடிக்கை பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நித்திக் ரோஷன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டான்.
3 நாட்களுக்கு பிறகு மீட்பு
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஒடுகத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலாஜி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் இரவு முழுவதும் நித்திக் ரோஷனை தேடினர். சிறுவனை கண்டுபிடிக்கம முடியாததால், நேற்றுமுன்தினம் அரக்கோணத்தில் இருந்து கோபி கிருஷ்ணன் தலைமையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 20 பேர் வரவழைக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து பிளாஸ்டிக் படகுகளில் தேடி வந்தனர். இரவு நேரமாகி் விட்டதால் தேடுதல்பணி நிறுத்தப்பட்டது.
நிலையில் நேற்று காலை சிறுவனின் உடல் ஆற்று வெள்ளத்தில் மிதந்தது. இதைப்பார்த்த பேரிடர் மீட்புக் குழுவினர் உடலை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story