திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழைக்கு 122 வீடுகள் சேதம்
தொடர் மழைக்கு 122 வீடுகள் சேதம்
திருப்பத்தூர்
வடகிழக்கு பருவ மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக விடாது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பல ஏரிகள் நிரம்பி வருகிறது.
மழைநீர் ஊருக்குள் புகுந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பத்தூர் அருகே ஆதியூர் பாலிடெக்னிக்கில் 156 பேரும், ஜோலார்பேட்டை கட்டேரியம்மன் கோவில் மண்டபத்தில் 93 பேரும், குரும்பேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 53 பேரும் என 3 முகாம்களில் 217 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழையின் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். 8 கால்நடைகள் உயிரிழந்துள்ளது. 104 வீடுகள் பகுதியாகவும், 18 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story