குமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார்


குமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார்
x
தினத்தந்தி 14 Nov 2021 8:19 PM IST (Updated: 14 Nov 2021 8:19 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதல்அமைச்சர் முக ஸ்டாலின் இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார்

தூத்துக்குடி:
குமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார்.
முதல்-அமைச்சர்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். அதன்படி கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) வருகிறார்.
வருகை
இதற்காக அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு காலை 8.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டத்துக்கு செல்கிறார். அங்கு வெள்ளப்பாதிப்புகளை ஆய்வு செய்து விட்டு மாலையில் மீண்டும் கார் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வருகிறார். பின்னர் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
இதனை முன்னிட்டு தூத்துக்குடிக்கு வருகை தரும் முதல்-அமைச்சரை வரவேற்பதற்கு தி.மு.க.வினர் தயாராகி வருகின்றனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story