தூத்துக்குடி மாவட்டத்தில் 1611 வாக்குச்சாவடிகளில் நேற்று 2வது நாளாக வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது


தூத்துக்குடி மாவட்டத்தில் 1611 வாக்குச்சாவடிகளில் நேற்று 2வது நாளாக வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது
x
தினத்தந்தி 14 Nov 2021 8:28 PM IST (Updated: 14 Nov 2021 8:28 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 1611 வாக்குச்சாவடிகளில் நேற்று 2வது நாளாக வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 1,611 வாக்குச்சாவடிகளில் நேற்று 2-வது நாளாக வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது. முகாமை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
வாக்காளர் பட்டியல்
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந் தேதி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் பணி அன்றைய தேதியில் இருந்து வருகிற 30-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் போன்றவைகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக நவம்பர் மாதம் 13, 14, 27, 28 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி நேற்று முன்தினம் சிறப்பு காம் நடந்தது. இதில் ஒரே நாளில் சுமார் 4 ஆயிரம் பேர் விண்ணப்ப மனு அளித்தனர். வாக்களர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு மட்டும் சுமார் 3 ஆயிரம் பேர் மனு அளித்தனர். மேலும், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவைகளுக்கு 1000 பேர் மனு அளித்து உள்ளனர்.
2-வது நாள்
இதன் தொடர்ச்சியாக 2-வது நாளாக நேற்று சிறப்பு முகாம் நடந்தது. மாவட்டத்தில் உள்ள 1,611 வாக்குச்சாவடிகளிலும் இந்த முகாம் நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் வந்து மனு கொடுத்தனர். இந்த பணிகளுக்காக மாவட்டத்தில் 1,611 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 889 நியமன அலுவலர்கள், 156 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். மேலும் 6 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் பணிகளை கண்காணித்தனர். அதே போன்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று பணிகளை ஆய்வு செய்தார்.

Next Story