கீழ்வேளூர் அருகே ஆடுகளை திருடி சென்ற போது காரை மடக்கி பிடித்த பொதுமக்கள்
கீழ்வேளூர் அருகே ஆடுகளை திருடி சென்ற போது பொதுமக்கள் காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.தப்பி ஓடிய மர்ம நபர்கள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே ஆடுகளை திருடி சென்ற போது பொதுமக்கள் காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.தப்பி ஓடிய மர்ம நபர்கள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காரில் ஆடுகள் திருட்டு
கீழ்வேளூர் அருகே சிகார் ஊராட்சி செட்டி தெருவை சேர்ந்தவர் தியாகராசன் (வயது 53). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 2 மணி அளவில் அவர் வளர்த்து வரும் ஆடுகள் சத்தம்போட்டு உள்ளன. இதனால் அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது 3 பேர், அவரது 2 ஆடுகளை காரில் திருடி சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்து திருடன், திருடன் என சத்தம் போட்டுள்ளார்.
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காரை விரட்டி சென்று காக்கழனி- தேவூர் சாலையில் இரட்டை மதகடி பகுதியில் மடக்கினர். இதனால் காரில் வந்த 3 நபர்கள் ஆடுகளுடன் காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
3 பேருக்கு வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆடுகளை திருட பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.மேலும். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்கள் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story