பழனியில் ஸ்டீயரிங் பழுதால் தடுப்பில் மோதிய அரசு பஸ் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்


பழனியில் ஸ்டீயரிங் பழுதால் தடுப்பில் மோதிய அரசு பஸ் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 14 Nov 2021 8:57 PM IST (Updated: 14 Nov 2021 8:57 PM IST)
t-max-icont-min-icon

பழனியில் ஸ்டீயரிங் பழுதால் அரசு பஸ் தடுப்பில் மோதி நின்றது. இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பழனி:
பழனி அருகே உள்ள அய்யம்பாளையத்தில் இருந்து ஒரு டவுன் பஸ் நேற்று காலை பழனி நோக்கி வந்தது. பஸ்சில் 20 பயணிகள் இருந்தனர். பழனி நகர் சுப்பிரமணியபுரம் சாலையில் வந்தபோது திடீரென பஸ்சின் ‘ஸ்டீயரிங்' பழுதானது. இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி ஓடியது. இதைக்கண்டு பஸ்சில் இருந்தவர்கள் அலறினர். ஒரு கட்டத்தில் பஸ் சாலையோரத்தில் உள்ள சாக்கடை கால்வாய் தடுப்பில் மோதி நின்றது. இதையடுத்து பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பின்னர் போக்குவரத்து துறையினர் வந்து ‘ஸ்டீயரிங்' பழுதை சரி செய்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பழனி பகுதியில் இயக்கப்படும் பல டவுன் பஸ்கள் பழுதான நிலையில் உள்ளது. இதனால் பல இடங்களில் பஸ் பாதி வழியில் நிற்பதும், அதை தள்ளி செல்வதும் அரங்கேறி வருகிறது. ‘ஸ்டீயரிங்' பழுதான நிலையில் பல பஸ்கள் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் நெய்க்காரப்பட்டி பெருமாள்புதூரில் ‘ஸ்டீயரிங்' பழுதாகி பஸ் பாதிவழியில் நின்றது. எனவே பழனி பகுதியில் இயங்கக்கூடிய டவுன் பஸ்களில் உள்ள பழுதை சரிசெய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story