16 லட்சம் பேருக்கு தடுப்பூசி


16 லட்சம் பேருக்கு தடுப்பூசி
x
தினத்தந்தி 14 Nov 2021 8:58 PM IST (Updated: 14 Nov 2021 8:58 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 7 மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் நேற்று 8-ம் கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 1082 இடங்களில் நடைபெற்றது. இதில் தளவானூர் ஊராட்சியில் நடந்த கொரோனா  தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
அப்போது அவர் கூறுகையில்,  விழுப்புரம் மாவட்டத்தில் இது வரை 16 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது. தடுப்பூசி முதல் தவணை செலுத்தி கொண்டவர்கள் உரியகாலத்திற்குள் இரண்டாவது தவணையும் செலுத்திக் கொள்ள வேண்டும். அதே போல் இது வரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் விரைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். இந்த ஆய்வின்போது அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Next Story