பாம்பு கடித்து கல்லூரி மாணவர் சாவு
கள்ளக்குறிச்சி அருகே பாம்பு கடித்து கல்லூரி மாணவர் சாவு
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் சூரியபிரகாஷ்(வயது 20). இவர் தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று சூரியபிரகாஷ் உலகங்காத்தான் கிராமத்தில் உள்ள வயல்வெளியை பார்த்து விட்டு குன்னு பாதை வழியாக நடந்து வந்தபோது அவரை பாம்பு கடித்தது. இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் சூரியபிரகாசை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story