மாவட்ட செய்திகள்

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது + "||" + The thuggery law was passed on Valipar

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மயிலாடுதுறை அருகே சாராயம் விற்ற வழக்கில் போலீசார் வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை அருகே சாராயம் விற்ற வழக்கில் போலீசார் வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
வாலிபர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அகர கீரங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மகன் சர்க்கரை என்கிற சார்லஸ் (வயது 28). இவர் தொடர்ந்து அகர கீரங்குடி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார்.
இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 25-ந் தேதி பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவதாஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சார்லசை கைது செய்தனர். பின்னர் அவரை மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகை  சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் பரிந்துரையின் பேரி்ல் சார்லசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் லலிதா கடந்த 11-ந் தேதி உத்தரவிட்டார். அதன்பேரில் பெரம்பூர் போலீசார், சார்லசை குண்டர் சட்டத்தில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தலைமை ஆசிரியர் கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
3. வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது