முகவரி கேட்பதுபோல் மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு
முகவரி கேட்பதுபோல் மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மூலக்குளம், நவ
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கம்பன்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி முத்தாலு (வயது 60). ஜெயராமன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், முத்தாலு தனது மகன் பிரபாகரனுடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் முத்தாலு வீட்டு வாசலில் நின்று கொண்டு தனது பேத்திக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஒருவர் முத்தாலுவிடம் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்தார். பின்னர் திடீரென அவர், முத்தாலு கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தாலுவிடம் நகையை பறித்துச்சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story