லாரிகள் நேருக்கு நேர் மோதல்4 பேர் படுகாயம்
லாரிகள் நேருக்கு நேர் மோதல்4 பேர் படுகாயம்
காங்கேயம்,
ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவிலில் இருந்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்திற்கு நெல் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ஞானஎடிசன் (வயது27) ஓட்டி வந்தார். அதேபோல அரியலூரில் இருந்து கோவைக்கு சிமெண்டு மூட்டைகள் ஏற்றிக்கொண்டு மற்றொரு லாரி சென்று கொண்டிருந்தது. சிமெண்டு லாரியை மணிவண்ணன் (32) ஓட்டி வந்தார். இந்த லாரியில் அவருடன் அவரது உறவினர்களான சவுந்தர்யா (16), சண்முகவள்ளி (18) ஆகிய 2 பெண்களும் பயணம் செய்தனர். நேற்று அதிகாலை 1 மணியளவில், 2 லாரிகளும் கரூர்-கோவை, காங்கேயம்-தாராபுரம் சாலை சந்திப்பில் உள்ள போலீஸ் நிலைய ரவுண்டானாவில் எதிர்பாராமல் இரண்டு லாரிகளும் மோதிக்கொண்டன. இதில் நெல் ஏற்றி வந்த லாரி போலீஸ் நிலையம் முன்பு உள்ள தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 2 லாரிகளின் டிரைவர்கள் லாரியில் பயணம் செய்த 2 பெண்கள் என 4 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தில் 2 லாரிகளும் சேதமடைந்தன. மேலும் லாரியில் இருந்த நெல் மூட்டைகள் சாலையில் சிதறிக்கிடந்தன. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான 2 லாரிகளும் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. சாலையில் சிதறிக்கிடந்த நெல் மூட்டைகள் வேறு லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story