சோளிங்கர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்தது
ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்தது
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ரெண்டாடி கிராமத்தில் ஆரம்பசுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. ரெண்டாடி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களிலிருந்து கர்ப்பிணிகள் மற்றும் பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையின் காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் கர்ப்பிணிகள் மற்றும் சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். சுகாதார நிலைய கட்டிடம் பழைய கட்டிடம் என்பதால் பல்வேறு இடங்களில் மழை நீர் கசிந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story