கடலூரில், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் குழந்தைகள் தின சட்ட விழிப்புணர்வு பேரணி
நீதிபதிகள் தொடங்கி வைத்தனர்
கடலூர்,
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைத்தொடர்ந்து மக்களிடம் தேசிய, மாநில, மாவட்ட மற்றும் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு கடந்த மாதம் 2-ந்தேதி முதல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இதன் நிறைவு நாளான நேற்று குழந்தைகள் தின சிறப்பு சட்ட விழிப்புணர்வு பேரணி கடலூரில் நடந்தது. கடலூர் தலைமை தபால் நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி ஜவகர் ஆணைக் கிணங்க தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி சுபா அன்புமணி, போக்சோ நீதிமன்ற நீதிபதி எழிலரசி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த பேரணி பழைய கலெக்டர் அலுவலக சாலை வழியாக சென்று நீதிமன்ற வளாகத்தை சென்றடைந்தது. இதில் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள், வக்கீல் சங்க தலைவர்கள், செயலாளர்கள், வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பாக்கியம் செய்திருந்தார்.
Related Tags :
Next Story