சிறு குற்ற வழக்குகளில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகள் விரைவில் விடுதலை
விசாரணை கைதிகள் விரைவில் விடுதலை
வேலூர்
வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் ஜெயிலில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என்று 700-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது அவர், சிறிய குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் நீண்ட நாட்களாக அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக ஜெயில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், பின்னர் ஜெயிலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தாக கூறப்படுகிறது.
ஆய்வின்போது ஜெயில் சூப்பிரண்டு ருக்குமணி பிரியதர்ஷனி மற்றும் ஜெயில் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், வேலூர் மத்திய ஜெயிலில் சிறு குற்ற வழக்குகளில் கைதாகி அடைக்கப்பட்ட விசாரணை கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக குழு அமைக்கப்படும். அவர்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக முடித்து விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story