கலசபாக்கம் அருகே குடும்ப தகராறில் 2-வது மனைவி அடித்துக்கொலை
கலசபாக்கம் அருகே குடும்ப தகராறில் 2-வது மனைவியை விறகு கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
கலசபாக்கம்
கலசபாக்கம் அருகே குடும்ப தகராறில் 2-வது மனைவியை விறகு கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
விறகு கட்டையால் தாக்கினார்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த கப்பலூர் மேட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் விவசாயி. இவருக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மனைவி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு துரைராஜ் வளர்மதி (வயது 45) என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு அஜித்குமார் என்ற மகனும், சந்தியா என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று நிலத்தில் உள்ள கொட்டகையில் இருந்த வளர்மதிக்கும், துரைராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த துரைராஜ் விறகு கட்டையால் வளர்மதியின் தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த வளர்மதி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். உடனே துரைராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
வலைவீச்சு
இதுபற்றி அவரது மகள் சந்தியாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக வளர்மதியை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த கலசபாக்கம் போலீசார் நேரில் சென்று விசாரணை செய்து தப்பி ஓடிய துரைராஜை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story