வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மூதாட்டி பலி


வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மூதாட்டி பலி
x
தினத்தந்தி 14 Nov 2021 11:40 PM IST (Updated: 14 Nov 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மூதாட்டி பலி

அணைக்கட்டு
 
பள்ளிகொண்டா அருகே வெட்டுவாணம் கோவிந்தபாடி தெருவை சேர்ந்தவர் விஜயா (வயது 60). .இவருக்கு சொந்தமான நிலம் வெட்டுவாணம் அருகே அகரம்‌ ஆற்றின் கரையோரம் உள்ளது. இவர் நேற்று முன்தினம் மாலை நிலத்திற்கு செல்ல ஆற்றங்கரை மீது நடந்து சென்று கொண்டிருக்கும்போது தவறி ஆற்றில் விழுந்தார். அப்போது ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அடித்துச் செல்லப்பட்டார். 

விஜயா வீட்டில் இல்லாததால் அக்கம்பக்கத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். இந்த நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்று காலை அகரம்ஆற்றின் கரை மீது சென்று கொண்டிருந்தபோது விஜயாவின் உடல் கரை ஓரத்தில் ஒதுங்கி உள்ளதை பார்த்து பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விஜயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story