பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஒரே நாளில் 42,456 பேருக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் ஒரே நாளில் 42,456 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
பெரம்பலூர்,
8-வது கட்டமாக...
கொரோனா வைரசின் 3-ம் அலை வராமல் தடுக்க தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நேற்று 8-வது கட்டமாக தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான மாபெரும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 195 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 343 இடங்களிலும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
முகாமில் கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டன. இதுவரை தடுப்பூசி எடுத்து கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்து கொண்டு தவணை நாட்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களும் முகாம் நடைபெறும் இடத்துக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டு சென்றனர்.
கலெக்டர்கள் ஆய்வு
கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவும், அரியலூர் மாவட்டத்தில் ரமணசரஸ்வதியும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட 7 சிறப்பு முகாம்களில் மொத்தம் 1 லட்சத்து 38 ஆயிரத்து 550 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நேற்று நடந்த 8-வது கட்ட சிறப்பு முகாமில் 17 ஆயிரத்து 321 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட 7 சிறப்பு முகாம்களில் மொத்தம் 2 லட்சத்து 82 ஆயிரத்து 656 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
நேற்று நடந்த 8-வது கட்ட சிறப்பு முகாமில் 25 ஆயிரத்து 135 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
Related Tags :
Next Story