மாவட்ட செய்திகள்

பேக்கரி கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் + "||" + Penalty

பேக்கரி கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

பேக்கரி கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
தண்ணீர் தொட்டியில் கொசுக்கள் இருந்ததால் பேக்கரி கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகாசி, 
சிவகாசி பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிவகாசி சப்-கலெக் டர் பிரிதிவிராஜ், தாசில்தார் ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். அப்போது பஞ்சர்  பார்க்கும் கடை ஒன்றில் அதிகளவில் பழைய டயர்களை சேமித்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்ற பழைய டயர்களில் கொசுக்கள் அதிகம் உற்பத்தி யாக வாய்ப்பு இருப்பதாக கூறி அந்த டயர்களை அதிகாரிகள் பறி முதல் செய்தனர். இதே போல் குடிநீர் வினியோகம் செய்யும் வாகனம் ஒன்றில் நடைபெற்ற சோதனையில் அந்த வாகனத்தில் அமைக்கப்பட் டுள்ள குடிநீர் தொட்டி முறையாக குளோரினால் சுத்தம் செய்யப்படாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. திருத்தங்கல் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் அந்த பேக்கரில் இருந்த தண்ணீர் தொட்டியில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அந்த பேக்கரிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதே பகுதியில் உள்ள ஒரு கறிக்கடையில் பயன்படுத்தி வந்த தண்ணீர் தொட்டியில் கொசு உற்பத்தியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அந்த கறிக்கடையின் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப் பட்டது. தொடர்ந்து இதுபோன்ற ஆய்வுகள் நடக்கும் என்றும், அரசின் விதிகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

1. முககவசம் அணியாத 198 பேருக்கு அபராதம்
நெல்லை மாவட்டத்தில் முககவசம் அணியாத 198 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
2. தமிழகம் முழுவதும் ரூ.3½ கோடி அபராதம் வசூல் - முக கவசம் அணியாத 1.64 லட்சம் பேர் சிக்கினர்
கடந்த வாரத்தில்: தமிழகம் முழுவதும் ரூ.3½ கோடி அபராதம் வசூல் - முக கவசம் அணியாத 1.64 லட்சம் பேர் சிக்கினர்.
3. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 12 பேருக்கு அபராதம்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 12 பேருக்கு சிவகாசி யூனியன் அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
4. முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் ரூ.26 ஆயிரம் அபராதம் வசூல்
முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் ரூ.26 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
5. முககவசம் அணியாத 303 பேருக்கு அபராதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி முககவசம் அணியாத 303 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.