வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை கலெக்டர் விஷ்ணு ஆய்வு


வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை கலெக்டர் விஷ்ணு ஆய்வு
x
தினத்தந்தி 15 Nov 2021 1:14 AM IST (Updated: 15 Nov 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாைம கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நெல்லை:
நெல்லையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாைம கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலந்தாய்வு கூட்டம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பான அரசியல் கட்சி நிர்வாகிகள், பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. 

கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். வாக்காளர் பட்டியல் பார்வையாளர் லட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார், உதவி கலெக்டர்கள் சந்திரசேகர், சுமதி தாசில்தார்கள் கந்தப்பன், ஆவுடையப்பன் இசக்கிபாண்டி, பல்வேறு அரசியல் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு முகாமில் ஆய்வு

இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் கீழநத்தம் பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் சிறப்பு முகாமை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் லட்சுமி, கலெக்டர் விஷ்ணு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நேற்று நெல்லை மாவட்டத்தில் 1,483 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5-30 மணி வரை நடைபெற்றது. இதில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பெயர்களை ஆர்வமுடன் சேர்த்தனர். இதைப்போல் வருகிற 27-ந் தேதியும், 28-ந் தேதியும் இந்த முகாம் நடைபெறுகிறது.

Next Story