பெண்ணுக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது


பெண்ணுக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 Nov 2021 1:34 AM IST (Updated: 15 Nov 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:

நெல்லை அருகே உள்ள அனைத்தலையூர் மறக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருடைய மனைவி ஆயிரம் (வயது 50). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னத்துரை என்ற சின்ன ஊய்க்காட்டான் (51) என்பவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சின்னத்துரை, நேதாஜி நகரை சேர்ந்த தண்ணீர் பழம் (22) ஆகிய 2 பேரும், ஆயிரம் வீட்டிற்கு சென்று அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்துள்ளனர். மேலும் அவருக்கு அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து, சின்னத்துரை உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்தார்.

Next Story