குழந்தைகள் தின ஓவிய போட்டி
அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஓவிய போட்டி நடந்தது.
நெல்லை:
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் விழா குழந்தைகள் தினமாக நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவில் 1-முதல் 8-வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமை தாங்கினார். தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கோட்ட பொறியாளர் ஆனையப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்த போட்டிகளுக்கு நடுவர்களாக இசக்கி, சுரேஷ், ஆலப்பநாதன் ஆகியோர் செயல்பட்டனர். முடிவில் கலையாசிரியர் சொர்ணம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story