மினி லாரியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
தினத்தந்தி 15 Nov 2021 1:46 AM IST (Updated: 15 Nov 2021 1:46 AM IST)
Text Sizeமினிலாரியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சங்கரன்கோவில்:
கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் வேலாயுதபுரம் சோதனை சாவடியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலங்குளம் அண்ணாநகரை சேர்ந்த துரைபாண்டி மகன் சேகர் (வயது 35) என்பவர் வந்த மினி லாரியை சோதனை செய்தனர். இதில் சேகர் உசிலம்பட்டியில் இருந்து 1¾ கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து சேகரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சாவையும், மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire