ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காய்கறி வியாபாரி சாவு
ஆரல்வாய்மொழி அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காய்கறி வியாபாரி பரிதாபமாக இறந்தார். மகளை பார்க்க சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காய்கறி வியாபாரி பரிதாபமாக இறந்தார். மகளை பார்க்க சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
காய்கறி வியாபாரி
நாகர்கோவில் வடிவீஸ்வரம் அண்ணாநகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 66), காய்கறி வியாபாரி. இவருடைய மகள் திருமணமாகி தாழக்குடி அருகே பூழாங்குழி பகுதியில் கணவருடன் வசித்து வந்தார்.
குமரி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், பூதப்பாண்டி, தாழக்குடி பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளானது.
ஆற்று வெள்ளத்தில் சிக்கினார்
இதனால் பாஸ்கரன் மகளை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மொபட்டில் பூழாங்குழிக்கு புறப்பட்டார்.
அவர் நாகர்கோவிலில் இருந்து திருப்பதிசாரம் சென்றார். பின்னர் அங்கிருந்து வீர நாராயணமங்கலம் வழியாக செல்லும் போது ஆற்று வெள்ளம் பாஸ்கரனை மோட்டார் சைக்கிளோடு இழுத்து சென்றது. இதை யாரும் கவனிக்கவில்லை.
சாவு
இந்த நிலையில் நேற்று காலையில் அந்த பகுதியில் பார்த்த போது வெள்ளம் வடிந்து இருந்தது. வயல் பகுதியில் மொபட் ஒன்று கிடந்தது. அதன் அருகில் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்த பகுதி வழியாக சென்றவர்கள், இதை பார்த்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது தான் இறந்தது பாஸ்கரன் என்பது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story