ரூ.7.88 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


ரூ.7.88 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 15 Nov 2021 2:48 AM IST (Updated: 15 Nov 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

ரூ.7.88 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

செம்பட்டு:

சோதனை
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஷார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
தங்கம் பறிமுதல்
அப்போது பயணி ஒருவர் கொண்டு வந்த உடைமைகளில் துளையிடும் எந்திரத்தில் மறைத்து 158 கிராம் 24 கேரட் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.7.88 லட்சம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story