கோவில் உண்டியல்களை தூக்கிச்சென்று பணம் திருட்டு


கோவில் உண்டியல்களை தூக்கிச்சென்று பணம் திருட்டு
x
தினத்தந்தி 15 Nov 2021 2:48 AM IST (Updated: 15 Nov 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

கோவில் உண்டியல்களை தூக்கிச்சென்று பணம் திருடப்பட்டது.

உப்பிலியபுரம்:
உப்பிலியபுரம்- தம்மம்பட்டிக்கு இடையிலான மெயின்ரோட்டில் மங்கப்பட்டி மாரியம்மன் ேகாவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்னர் பூசாரி ராமச்சந்திரன்(வயது 60) கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை மீண்டும் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கோவில் உள்ளே இருந்த 3 அடி உயர 2 உண்டியல்கள் திருட்டு போயிருந்தன. இதுபற்றி அவர் உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து நடத்தினர். இதில், முதல்நாள் இரவில் மழை பெய்ததை சாதகமாக பயன்படுத்தி கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த உண்டியல்களை தூக்கிச்சென்று ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள தோட்டத்தில் வைத்து உடைத்து, அவற்றில் இருந்த பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அங்கு போலீஸ் மோப்ப நாய் ‘ஸ்பார்க்’ வரவழைக்கப்பட்டு, பயிற்சியாளர் ஆனந்த் உதவியுடன் துப்பு துலக்கப்பட்டது. கோயிவில் இருந்து உண்டியல்கள் உடைக்கப்பட்ட இடத்திற்கு ஓடிச்சென்ற மோப்ப நாய், அங்கிருந்து மெயின்ரோட்டிற்கு சென்று படுத்துக்கொண்டது. கைரேகை நிபுணர் வீரபிரதீப் சம்பவ இடத்தில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தார். இந்த சம்பவம் குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story