மது விற்ற 5 பேர் கைது


மது விற்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 15 Nov 2021 2:48 AM IST (Updated: 15 Nov 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

வையம்பட்டி:
திருச்சி மாவட்டம், வையம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை களை கட்டுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று வையம்பட்டி போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி அருகே சட்டவிரோதமாக மது விற்றதாக வலையபட்டியைச் சேர்ந்த காத்தமுத்து(வயது 55) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 70 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் லெச்சம்பட்டி பிரிவு சாலை அருகே மது விற்ற கிடங்குடியை சேர்ந்த வேல்முருகன்(42), திண்டுக்கல் மாவட்டம், செட்டியபட்டியைச் சேர்ந்த சரவணன்(39) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் பழையகோட்டை பிரிவு சாலையை அடுத்த பார் அருகே சட்டவிரோதமாக மது விற்ற திண்டுக்கல் மாவட்டம், கம்பளியம்பட்டி அருகே உள்ள கூடத்திப்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன், கறம்பக்குடியை சேர்ந்த திருமேணி(37) ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் ெசய்தனர்.

Next Story