சாலையை சீரமைக்க வலியுறுத்தி சேற்றில் நாற்று நடும் போராட்டம்
நல்லம்பள்ளியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பெண்கள் சேற்றில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட காவேரிநகர், பழனிநகர், சேசம்பட்டிநகர் குடியிருப்பு வீதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் சாலை வசதி, சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் மழைநீர் சாலையில் தேங்கி நின்றது. மேலும் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட கிராம பெண்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தி நேற்று சேற்றில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அலுவலர்கள் வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story