நாமக்கல் மாவட்டத்தில், ஒரே நாளில் 31,950 பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில், ஒரே நாளில் 31,950 பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மெகா தடுப்பூசி முகாமில் 31,950 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெகா தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடந்த 7 மாபெரும் தடுப்பூசி முகாம்களில் 3,50,774 பேர் தடுப்பூசி செலுத்தி பயன் அடைந்தனர். இந்த நிலையில் 8-வது கட்டமாக நேற்று அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 740 மையங்களில் கொரோனா நோய் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இம்முகாம் பணிகளில் 210 மருத்துவர்கள், 430 செவிலியர்கள், 1600 அங்கன்வாடி பணியாளர்கள், 1400 தன்னார்வலர்கள், 415 பயிற்சி செவிலியர்கள் மற்றும் 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 1400 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
கலெக்டர் பார்வையிட்டார்
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட சின்னமுதலைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொள்வதை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டார். அப்போது உதவி கலெக்டர் மஞ்சுளா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் உடன் இருந்தனர்.
மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் இரவு வரை நடைபெற்ற சிறப்பு முகாமில் 31,950 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story