சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அவினாசி,
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா பள்ளியின் ஆசிரியர் பிளஸ்2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காரணமாக அந்த மாணவி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் மீது போக்சோ சட்டத்தை வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், அவர்கள் மீதான வழக்கு விசாரணை உடனே தொடங்க வேண்டும். தனியார் பள்ளி கல்லூரிகளில், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பாலியல் விழிப்புணர்வு கல்வி அளிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஐ.சி.சி., முறையாக யு.சி.ஜி. வழிகாட்டுதல் அடிப்படையில் அமைத்து மாணவர்களுக்கு தெரியும் வகையில் செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். குற்றங்கள் நடக்காமல் இருக்க மாவட்ட அளவில் மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள், பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், மாணவர் சங்க பிரதிநிதிகள் அனைவரையும் இணைத்து ஒரு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவினாசி அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர்கள் பாலமுரளி, மணிகண்டன், மாவட்ட குழு உறுப்பினர் சஞ்சய் உட்பட திரளானோர்.கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story