காலிபிளவர் செடியில் நோய் தாக்குதல்
பெதப்பம்பட்டி பகுதியில் காலிபிளவர் சாகுபடியில் நோய் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் மகசூல் பாதிக்கும் நிலை உள்ளது.
குடிமங்கலம்
பெதப்பம்பட்டி பகுதியில் காலிபிளவர் சாகுபடியில் நோய் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் மகசூல் பாதிக்கும் நிலை உள்ளது.
காலிபிளவர்
குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் காலிபிளவர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அந்த வகையில் ஒருசில விவசாயிகள் சிறந்த லாபம் தரக்கூடிய காலிபிளவர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
காலிபிளவர் சாகுபடியை பொறுத்தவரை மண்வளம் மட்டுமல்லாமல் பயிரிடுவதற்கான சரியான பருவம் மற்றும் சிறந்த பராமரிப்பு அவசியமாகும். சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட கூடியது மற்றும் கால்சியம் சத்து அதிகம் கொண்டது என்ற வகையில் காலிபிளவர் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் எல்லா காலத்திலும் காலிபிளவருக்கு நல்ல விலை கிடைக்கிறது. ஒரு ஏக்கரில் 15 ஆயிரம் கன்றுகள் வரை நடவு செய்யலாம். காலிபிளவரை நல்லமுறையில் பராமரித்து வந்தால் 60 நாட்களில் பூக்கத் தொடங்கும். ஒரு செடிக்கு ஒரு பூ மட்டுமே வரும். 90 நாள்களில் அறுவடை செய்யலாம்.
மகசூல் பாதிப்பு
அறுவடை செய்யப்படும் காலிபிளவர் உடுமலை மற்றும் பொள்ளாச்சி சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு செல்கிறோம். உழவர் சந்தையிலும் விற்பனை செய்யப்படுகிறது. காலிபிளவர் சாகுபடியை பொருத்தவரை பூக்களை அறுவடை செய்யக் கூடிய தருணத்தில் மழை பெய்ததால் பூக்கள் அழுகி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அசுவினி பூச்சிகள், வெட்டுப்புழுக்கள், கூட்டுப்புழு, நூற்புழு மற்றும் இலைப்புள்ளிநோய் வேர் முடிச்சு போன்றவற்றினால் காளிபிளவர் சாகுபடியில் பாதிப்பு ஏற்படும். பெதப்பம்பட்டி பகுதியில் காலிபிளவரில் நோய்த்தாக்குதல் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் மகசூல் பாதிக்கும் நிலை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story