தியாகராயநகரில் பஸ் சக்கரத்தில் சிக்கி ஜவுளி வியாபாரி பலி


தியாகராயநகரில் பஸ் சக்கரத்தில் சிக்கி ஜவுளி வியாபாரி பலி
x
தினத்தந்தி 15 Nov 2021 6:27 PM IST (Updated: 15 Nov 2021 6:27 PM IST)
t-max-icont-min-icon

தியாகராயநகரில் பஸ் சக்கரத்தில் சிக்கி ஜவுளி வியாபாரி முகமது அலி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்தவர் முகமது அலி (வயது 50). ஜவுளி வியாபாரி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். முகமது அலி நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் தியாகராயநகர், வடக்கு உஸ்மான் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி சாலையின் நடுவே விழுந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த பட்டினம்பாக்கம்-வடபழனி செல்லும் மாநகர பஸ்(தடம் எண்: 12பி) அவர் மீது ஏறி இறங்கியது. பஸ் சக்கரத்தில் சிக்கிய முகமது அலி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான முகமது அலியின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாநகர பஸ் டிரைவர் குப்புசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story