இதுவரை இழப்பீடு வழங்காததால் விவசாயிகள் கவலை
கடந்த ஆண்டு விவசாயம் அழிந்த நிலையில் இழப்பீடு வழங்காததால் காப்பீடு நிறுவனத்தின் மீது ஒட்டுமொத்த விவசாயிகளும் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம்,
கடந்த ஆண்டு விவசாயம் அழிந்த நிலையில் இழப்பீடு வழங்காததால் காப்பீடு நிறுவனத்தின் மீது ஒட்டுமொத்த விவசாயிகளும் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.
பருவமழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்த நிலையில் விவசாயிகள் அனை வரும் விவசாய பணிகளை ஆர்வமுடன் மேற்கொண்டனர். இந்த ஆண்டு விவசாயம் நன்றாக இருக்கும் என்று எதிர் பார்த்து இருந்த வேளையில் பயிர்கள் முளைத்து அறுவ டைக்கு தயாராக இருந்த நேரம் பார்த்து பருவமழைக்கு பிந்தைய காலம் அடைமழை பெய்தது.
இந்த மழையில் நெற்பயிர்கள் அனைத்தும் வயல்வெளிகளில் விழுந்து மீண்டும் முளைத்தது. பார்க்கவே பரிதாபமாக இருந்த இந்த நிலையை மத்திய ஆய்வுக்குழுவினர் நேரில் வந்து பார்வையிட்டு சென்றனர். இந்நிலையில் விவசாயி களின் இந்த நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு ரூ.8 ஆயிரம் ஏக்கருக்கு நிவாரணமாக வழங்கியது.
அதிர்ச்சி
மத்திய குழு பார்வையிட்டு சென்ற நிலையில் மாநில அரசு நிவாரணம் வழங்கியதால் மத்திய அரசின் காப்பீடு நிறுவனம் தேவையான இழப்பீடு வழங்கும் என்று விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால் விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மாவட்டத்தில் சில விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட விவசாய சங்க தலைவர் பொன் னக்கனேரி மிக்கேல் கூறியதாவது:- கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மத்திய அரசின் காப்பீடு நிறுவனம் இழப்பீடு வழங்கவில்லை. நெல்விவசாயம் அழிந்துவிட்டது என்பதற்கு மாநில அரசு வழங்கிய நிவாரணமே சாட்சியாகும்.
ஆனால், காப்பீடு நிறுவனம் அதனை கருத்தில் கொள்ளாமல் விவசாயிகளுக்கு புரியாத விளக்கத்தை கூறி ஏமாற்றி வருகிறது.
கடந்த 5 ஆண்டுகால விளைச்சலை கணக்கிட்டு வழங்கினால் எப்படி நியாயமாகும். இந்த ஆண்டு விவசாய பணிகளை தொடங்கி உள்ள நிலையில் இதுவரை வழங்காததால் மாநில அரசின் நிவாரண ஒப்புதலையே சாட்சியாக வைத்து மாநில அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் இணைத்து அனைத்து விவசாயிகளும் கோர்ட்டில் இழப்பீடு கோரி வழக்கு தொடர உள்ளோம். இவ்வாறு கூறினார்.
இழப்பீடு
இதுகுறித்து காப்பீடு நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனன் கூறியதாவது:- கடந்த ஆண்டு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 484 விவசாயிகள் 2 லட்சத்து 92 ஆயிரத்து 804 ஏக்கருக்கு காப்பீடு செய்திருந்தனர். இவர்களின் வயல்வெளிகளில் மேற்கொண்ட பயிர் அறுவடை பரிசோதனை மற்றும் ஆய்வின் அடிப்படையிலும் கடந்த 5 ஆண்டு கால அறுவடை அடிப்படையிலும் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி மாவட்டத்தில் 11 வருவாய் கிராமங்களில் உள்ள 5 ஆயிரத்து 70 விவசாயிகளுக்கு ரூ.2 கோடியே 42 லட்சம் இழப்பீடு அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
Related Tags :
Next Story