ஊட்டியில் பலத்த மழை
ஊட்டியில் பலத்த மழை பெய்தது. இதனால் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
ஊட்டி
ஊட்டியில் பலத்த மழை பெய்தது. இதனால் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
பலத்த மழை
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த 13-ந் தேதி முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) வரை அதிகனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குன்னூர், கோத்தகிரியில் தலா 6 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 குழு பிற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஊட்டியில் காலை முதலே வெயில் அடித்தது. மாலை 3 மணிக்குப்பிறகு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை அரை மணி நேரம் பலத்த மழையாக பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
படகு சவாரி நிறுத்தம்
ஊட்டி படகு இல்லத்தில் பாதுகாப்பு நடவடிக்கையாக மிதி படகு, துடுப்பு படகுகள் சவாரி நிறுத்தப்பட்டது. மழை விட்ட பிறகு படகுகள் இயக்கப்பட்டது. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், மழைநீர் தேங்கியது.
நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்திற்குள் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-4, எடப்பள்ளி-6, கோத்தகிரி-24, கீழ் கோத்தகிரி-12, சேரங்கோடு-10 என மழை பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story