அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.க்கு முன்ஜாமீன் வழங்க போலீசார் கடும் ஆட்சேபனை


அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.க்கு முன்ஜாமீன் வழங்க போலீசார் கடும் ஆட்சேபனை
x
தினத்தந்தி 15 Nov 2021 7:32 PM IST (Updated: 15 Nov 2021 7:32 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.க்கு முன்ஜாமீன் வழங்க போலீசார் கடும் ஆட்சேபனை

ஊட்டி

நீலகிரி மாவட்டம் குன்னுரை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன்(வயது 55), கடந்த 4-ந் தேதி இரவு குடிபோதையில் ஆடையின்றி முத்தாளம்மன் கோவில் தெருவில் உள்ள உறவினரான கோபி(47) வீட்டுக்குள் புகுந்தார். இதனால் அவரை கோபி, அவரது மகன் கிஷோர் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில் கோபாலகிருஷ்ணன், கோபி மீது குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே முன்ஜாமீன் கேட்டு ஊட்டி கோர்ட்டில் கோபாலகிருஷ்ணன் மற்றும் கிஷோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று ஊட்டி கோர்ட்டில் மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமறைவான கோபாலகிருஷ்ணனை ஜாமீனில் விட்டால் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வழக்கு விசாரணையை தாமதிக்கக்கூடும். 

முன்னாள் எம்.பி. என்பதால் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சாட்சிகளை கலைக்கக்கூடும். எனவே முன்ஜாமீன் வழங்க கூடாது என்று காவல்துறை தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. மேலும் கிஷோருக்கும் முன்ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த மனு மீதான விசாரணையை நாளைக்கு(புதன்கிழமை) நீதிபதி ஒத்திவைத்தார்.


Next Story