தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்தநாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்தநாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்தநாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிறந்த நாள்
தூத்துக்குடி நகர மக்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வந்த குரூஸ் பர்னாந்து பிறந்தநாள் விழா நேற்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி குரூஸ் பர்னாந்து உருவச்சிலைக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாநில தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் குரூஸ்பர்னாந்து பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் குரூஸ் பர்னாந்து உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கேக் வெட்டி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சியில் அமைப்பு சாரா ஓட்டுநரணி மாநில இணைச்ெசயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வக்கீல் வீரபாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அ.தி.மு.க.வினர் குரூஸ் பர்னாந்து உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜீவாபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் குரூஸ்பர்னாந்து பிறந்தநாள் விழா கொண்டாப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடியில் உள்ள குரூஸ்பர்னாந்து உருவச்சிலைக்கு மாவட்ட தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் வர்த்தக காங்கிரஸ் டேவிட் பிரபாகரன், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயக்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அ.ம.மு.க.
தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவச்சிலைக்கு அ.ம.மு.க. மாநில அமைப்பு செயலாளர்கள் ஹென்றி தாமஸ், சுந்தர்ராஜ், ஆகியோர் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில், மாநில பேரவை இணைச்செயலாளர் வி.பி.ஆர்.சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரணி
தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்தநாளையொட்டி, குரூஸ் பர்னாந்து நற்பணி மன்றம் சார்பில் தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் இருந்து மன்ற நிர்வாகிகள் மோட்டார் சைக்கிளில் பேரணியாக வந்தனர். பின்னர் நகரின் மைய பகுதியில் உள்ள குரூஸ்பர்னாந்து உருவச்சிலைக்கு மன்ற தலைவர் ஹெர்மன் கில்ட் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு குரூஸ் பர்னாந்து திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அங்கு பேராசிரியர் பாத்திமா பாபு கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். குரூஸ் பர்னாந்து பேத்தி ரேமோலா, மத்திய வியாபாரி சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கினர்.
நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க தலைவர் இசக்கிமுத்து, குரூஸ் பர்னாந்து நற்பணி மன்ற செயலாளர் சசிகுமார், பொருளாளர் டைரன்ஸ், எழுத்தாளர் நெய்தல் அண்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி நகரின் மைய பகுதியில் உள்ள அவருடைய உருவச்சிலைக்கு ஐ.என்.டி.யு.சி. மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான பெருமாள்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கீழஅரசடி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சேசுதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story