10 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 10 லட்சத்து 86ஆயிரத்து 880 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 10 லட்சத்து 86ஆயிரத்து 880 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
தடுப்பூசி முகாம்
சிவகங்கை மாவட்ட பொது சுகாதாரத்துறையின் மூலம் 8-ம் கட்ட கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதன் தொடக்க விழா சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையிலும் தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலையிலும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ராம்கணேஷ், பொது சுகாதாரத்துறை கண்காணிப்பு அலுவலர் துளசி ராமன், காஞ்சிரங்கால் ஊராட்சி தலைவர் மணிமுத்து உட்பட பலர்கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் 8-ம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் 650 இடங்களில் நடைபெறுகின்றன. நகராட்சிப் பகுதியில் 90 மையங்களிலும், பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் 560 இடங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுகின்றன. மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோர் 7 லட்சத்து 56 ஆயிரத்து 755 பேர் முதல் தவணை தப்பூசி செலுத்தி உள்ளனர். 2-ம் தவணையாக 3 லட்சத்து 30 ஆயிரத்து 125 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். மொத்தம் 10 லட்சத்து 86 ஆயிரத்து 880 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
சிறப்பு ஏற்பாடு
தற்போது நகராட்சி பகுதிகளிலும், பேரூராட்சி பகுதி களிலும் நடமாடும் வாகனம் மூலம் மருத்துவக் குழுவினர் மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள் மற்றும் வர முடியாத நபர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் வகை யில், ஆட்டோக்கள் மூலம் பணி மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 100 நடமாடும் வாகனம் மூலம் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story