ஓட்டல் பூட்டி சீல் வைப்பு


ஓட்டல் பூட்டி சீல் வைப்பு
x
தினத்தந்தி 15 Nov 2021 10:40 PM IST (Updated: 15 Nov 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் பல்லி விழுந்த உணவு பார்சலை வழங்கிய தாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஓட்டலை பூட்டி சீல் வைத்தனர்.

திருப்பத்தூர், 
திருப்பத்தூரில்  பல்லி விழுந்த உணவு பார்சலை வழங்கிய தாக  உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஓட்டலை பூட்டி சீல் வைத்தனர்.
பல்லி விழுந்த உணவு
திருப்பத்தூர் அருகே காட்டாம்பூர் ஊராட்சிக்குட்பட்ட சவுமியநாராயணபுரம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதார பணியாளர்களுக்கு காலை உணவு வாங்குவதற்காக திருப்பத்தூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் இட்லி பார்சல் வாங்கிச் சென்று அதை சுகாதார பணியாளர்கள் காலையில் சாப்பிட்டு உள்ளனர். 
இதில் ஒரு பார்சலை சுகாதார செவிலியர் சாப்பிட்டபோது அதில் இறந்த நிலையில் ஒரு பல்லி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து காலை உணவை உட்கொண்ட காட்டாம்பூர் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன், பயிற்சி கிராம உதவி செவிலியர் தேன்மொழி, திருக்கோஷ்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய லேப் டெக்னீசியன் கவுதமன், கிராம சுகாதார செவிலியர் ஜெயவாணி, மக்களை தேடி மருத்துவத்தில் பணியாற்றிய பானுப்பிரியா ஆகியோர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது. 
பூட்டி சீல் வைப்பு
இதையடுத்து அவர்களை ஊராட்சி தலைவர் கவிதா ராமச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்ட்ராஜ் ஆகியோர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மேலும் இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி களுக்கும் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து உணவு வாங்கிய அந்த ஓட்டலுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் தியாகராஜன், வருவாய் ஆய்வாளர் மன்சூர்அலி, கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி பாண்டியன் ஆகியோர் சென்று ஓட்டல் உரிமையாளர் காசி பைரவன் என்பவரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கு கெட்டுபோன நிலையில் இருந்த உணவுகளை பேரூ ராட்சி வாகனம் மூலம் எடுத்து சென்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அழித்தனர். 
அபராதம்
மேலும் கெட்டுபோன உணவு மற்றும் பல்லி இறந்து கிடந்த உணவை வழங்கியதாக அந்த ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து அந்த ஓட்டலை பூட்டி சீல் வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story