கள்ளக்குறிச்சி கல்லூரி மாணவர்கள் போராட்டம்
ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தக்கோரி கள்ளக்குறிச்சி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி,
ஆன்லைன் மூலம் கல்லூரி வகுப்புகளை நடத்திவிட்டு செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தக் கூடாது என்றும், ஆன்லைனிலேயே செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டும் எனக் கோரியும் கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, தமிழகத்தில் ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திவிட்டு, நேரடி தேர்வு வைப்பது மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும். எனவே ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர்.
இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இது பற்றி அறிந்ததும் கோட்டாட்சியர் சரவணன், தனி தாசில்தார்கள் பிரபாகரன், சையத்காதர் ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story