வயலில் மயங்கி விழுந்து விவசாயி சாவு
திருமக்கோட்டை அருகே மழையில் பயிர்கள் அழுகியதை பார்த்த அதிர்ச்சியில் வயலில் மயங்கி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
திருமக்கோட்டை:
திருமக்கோட்டை அருகே மழையில் பயிர்கள் அழுகியதை பார்த்த அதிர்ச்சியில் வயலில் மயங்கி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
விவசாயி
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 61). விவசாயி. இவரது மனைவி சாந்தி(50). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களது மகன் ஏற்கனவே இறந்து விட்டான்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் புதுக்குடி கிராமத்தில் 1 ஏக்கர் பண்ணை நிலத்தை குத்தகைக்கு எடுத்து சம்பா சாகுபடி செய்து வந்தனர். தொடர்ந்து பெய்த மழையில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகி விட்டதாக குடும்பத்தினரிடம் ராமலிங்கம் தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்டார்.
வயலில் மயங்கி விழுந்து சாவு
நேற்று விவசாய பணிக்காக வயலுக்கு ராமலிங்கம் சென்றுள்ளார். அப்போது பயிர்கள் அழுகியதை பார்த்த அதிர்ச்சியில் வயலில் மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஆயிஷா பேகம் திருமக்கோட்டை போலீசாருக்கு தகவல் ெதரிவித்தார்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வயலில் இறந்து கிடந்த ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மழையில் பயிர்கள் அழுகியதை பார்த்த அதிர்ச்சியில் விவசாயி வயலில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story