விழுப்புரத்தில் வணிக வளாக கழிப்பறைக்குள் புகுந்த நல்லபாம்பு
விழுப்புரத்தில் வணிக வளாக கழிப்பறைக்குள் புகுந்த நல்லபாம்பு
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வணிக வளாகத்தில் 90-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இந்த வணிக வளாகம் மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷபூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனிடையே இந்த வணிக வளாகத்தில் உள்ள பெண்கள் கழிப்பறைக்கு நேற்று பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அங்கு 6 அடி நீள நல்லபாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சல் எழுப்பினார். அப்போது பாம்பு சீறியதால் அந்த பெண் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். பின்னர் தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் அந்த பாம்பை லாவகமாக பிடித்துச்சென்று அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
Related Tags :
Next Story