கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் தீக்குளிக்க முயற்சி


கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 15 Nov 2021 11:56 PM IST (Updated: 15 Nov 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மனு கொடுக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர்
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  
மருத்துவ உதவி
கூட்டத்தில் வெங்கமேடு சின்னகுளத்துபாளையத்தை சேர்ந்த பரிதா பேகம் தனது மகனுடன் வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது 6 வயது மகன் அகமதுல்லாவின் இதயம் இடம் மாறி வலது புறத்தில் அமைந்துள்ளது. இதனால் அவ்வப்போது அவனுக்கு மூச்சு விடுதல் மற்றும் சளி தொல்லை அதிகமாக உள்ளது. எனவே எனது குழந்தையின் மருத்துவ செலவுக்கு உதவி செய்ய வேண்டும் என கூறியிருந்தார். 
தீக்குளிக்க முயற்சி
கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று 35 வயது பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் மனு கொடுக்க வந்தார். அப்போது கரூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திடீரென அவர் பையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி அவரது மேல் தண்ணீர் சுற்றி ஆசுவாசப்படுத்தினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 
மிரட்டல்
விசாரணையில், அவர் கடவூர் தாலுகாவுக்குட்பட்ட மோளபட்டி அருகே உள்ள காமம்பட்டியை சேர்ந்த ராஜலட்சுமி என்பதும், அவர் கடந்த 18.10.2021 அன்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தாங்கள் வசித்து வரும் வீட்டுக்கு முழுமையாக பட்டா கேட்டும் கழிவறை வசதி செய்து தர கோரியும் மனு அளித்துள்ளார்.
 அதனை தெரிந்து கொண்டு அருகாமையில் வசிப்பவர்கள் ராஜலட்சுமியையும், அவரது கணவரையும் மிரட்டி வந்துள்ளனர். இதனால் அவர் தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து பாதுகாப்பு கேட்டு ராஜலட்சுமி தனது கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கி விட்டு சென்றார். 
இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story