செல்போன் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் சாவு


செல்போன் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் சாவு
x
தினத்தந்தி 16 Nov 2021 12:25 AM IST (Updated: 16 Nov 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் உயிரிழந்தார்

கந்தர்வகோட்டை
திருச்சி காட்டூர் விக்னேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் விக்னேஷ் குமார்(வயது 27). என்ஜினீயர். இவர், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை கோவிலூர் கீழத்தெருவில் உள்ள ஒரு தனியார் செல்போன் காபுரத்தில் நேற்று ஏறி மாதாந்திர பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் கந்தர்வகோட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஷ் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கந்தர்வகோட்டை கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story