சதுரகிரியில் மழை; பக்தர்களுக்கு தடை


சதுரகிரியில் மழை; பக்தர்களுக்கு தடை
x
தினத்தந்தி 16 Nov 2021 12:39 AM IST (Updated: 16 Nov 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

சதுரகிரியில் மழை பெய்ததால் பக்தர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில்  சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று முதல் 19-ந் தேதி வரை பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சதுரகிரியிலும் நேற்று இரவு  சாரல் மழை பெய்ய தொடங்கியது. ஆதலால்  இன்று பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Next Story