கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் இன்று மின்தடை


கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 16 Nov 2021 1:04 AM IST (Updated: 16 Nov 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

கரிவலம்வந்தநல்லூர், நடுவக்குறிச்சி பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர், நடுவக்குறிச்சி ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் கரிவலம்வந்தநல்லூர், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையன்குளம், எட்டிசேரி, சென்னிகுளம், லட்சுமிபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் மற்றும் பெரியகோவிலாங்குளம், சின்ன கோவிலாங்குளம், நடுவக்குறிச்சி மைனர், வேப்பங்குளம், சில்லிகுளம், சூரங்குடி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை, சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Next Story