சேலம் அம்மாபேட்டையில் மூடப்பட்டு இருக்கும் கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் திறக்க கோரி ஆர்ப்பாட்டம்


சேலம் அம்மாபேட்டையில் மூடப்பட்டு இருக்கும் கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் திறக்க கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2021 3:35 AM IST (Updated: 16 Nov 2021 3:35 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அம்மாபேட்டையில் மூடப்பட்டு இருக்கும் கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் திறக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம்:
சேலம் அம்மாபேட்டையில் கூட்டுறவு நூற்பாலை செயல்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆலை நஷ்டத்தில் இயங்குவதாக கூறி கடந்த 2004-ம் ஆண்டு திடீரென மூடப்பட்டது. இதனால் 250 நிரந்தர தொழிலாளர்களுக்கும், பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மறைமுக தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு பறிபோனது. இந்த நூற்பாலையை மீண்டும் திறக்கக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தொழிலாளர்கள் தரப்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சேலம் கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் திறக்க கோரி அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் சங்கம், கைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மூடப்பட்டு இருக்கும் கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் திறக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். சேலம் மாவட்டத்தில் நெசவாளர்கள் அதிகளவில் வசிப்பதால் கூட்டுறவு நூற்பாலையை திறக்கும் பட்சத்தில் பல்லாயிரம் பேருக்கு நேரடி வேலை கிடைக்கும் என்றும் வலியுறுத்தினர்.

Next Story