ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தக்கோரி சேலத்தில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தக்கோரி சேலத்தில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2021 3:35 AM IST (Updated: 16 Nov 2021 3:35 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தக்கோரி சேலத்தில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்:
ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தக்கோரி சேலத்தில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செமஸ்டர் தேர்வு
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக கல்லூரிகள் முழுமையாக திறக்கப்படாத நிலை இருந்தது. தற்போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 
இதனால் ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வு நடைபெறாது என்றும், விரைவில் கல்லூரிகளில் நேரடியாக தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில், ஆன்லைனில் செமஸ்டர் தேர்வை நடத்தக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து மாணவர்கள் முன்னேற்ற அமைப்பு சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், தமிழகத்தில் ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி விட்டு தற்போது நேரடி தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடத்த வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து கல்லூரி மாணவர்கள் கூறுகையில், கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்த காலத்தில் ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தி, தேர்வும் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது ஆன்லைன் தேர்வு ரத்து செய்து அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேரடி தேர்வால் பல மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும். இந்த முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், என்றனர்.

Next Story